கேள்வி : கோபுர தரிசனம் கோடி புண்ணியமா...?
கோபி டெல்லி
கோயிலின் உள்ளே இருக்கக்கூடிய இறைவனின் பிரதிபிம்பம் தான் கோபுரங்கள், உதாரணமாக ஒரு கோயிலுக்குள் கணபதி. பெருமாள். அம்மன். கிருஷ்ணர். இராமர் போன்ற தெய்வங்களின் விக்ரஹங்கள் உண்டு என்பது நாம் அறிந்த ஒன்றே! கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள். உடல் ஊனமுற்றோர் போன்றோர் கோபுரத்தைத் தரிசித்தாலே போதும், உள்ளேயிருக்கக்கூடிய எல்லாத் தெய்வங்களின் பிரதிபிம்பம் தான் கோபுரம், நாம் தூரத்திலிருந்து பார்க்கும்போது கோபுரங்களும். கோபுர கலசங்களும் தான் நம் கண்ணுக்குத் தெரியும், மேலுó கோபிரத்தின் உள்ளேயிருந்து வரக்கூடிய காற்று நம் உடலை அழகாக வருடியும். மருத்துவ குணம் மிக்கதுமாக இருப்பது சிறப்பு, ஆகவே கோபுரத்தைத் தரிசித்து கோடி புண்ணியம் பெறுவோம்!
3 comments:
தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டோர் கோவிலுக்கு நுழைவதை தடைசெய்ய புனிதம், புண்ணியம் என்ற பெயரில் கிளப்பிவிடப் பட்டவையே 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்கிற சொல்வழக்கு. இதன் பொருல் 'உள்ளே வராதே எட்டி இருந்தே பார்த்து செல்' என்பதே. பெரும்பாலும் அக்கிரகார ஊர்களுக்கு வெளியே ஒதுக்குபுறத்தில் தீண்டதகாதவர் என்று ஒதுக்கி வைத்தோர் வசிப்பார்கள், அவர்களுக்கு கோபுரம் தான் கண்ணுக்கு தெரியும். அவர்களை முன்னிட்டு சொல்லி வைக்கப்பட்டதே கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்பது. காலகஸ்தி போன்ற கோவில்களின் காலவதி கோபுரங்கள் தொபுக்கடீர் என்று விழும் போது கோபுரங்களே எந்த புண்ணியம் பெறவில்லை என்பது நிருபனம்.
உங்கள் எண்ணமும் சரியாக இருக்கலாம் ஆனால் நான் சொல்வது சாஸ்திரபடி
ஐயா,தாங்கள் சொல்வது சரி.திரு கோ.வி.கண்ணன் சொல்வது கூட சரியாக இருக்கலாம்.ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும் அதன் மூலம் வரக்கூடிய பலன் ஒன்றுதான்.உள்ளே சென்று வணங்குபவருக்கும் வெளியில் இருந்தே வணங்குபவருக்கும் இறைவன் ஒன்றாகவே அருள் வழங்குவார்.ஆனால் இறைவனை நம் மனதின் உள்ளே இருத்தி வணங்கினால்தான்.ஆக எது முக்கியம் என புரிந்திருக்கும்.திரு கோவியாருக்கு
Post a Comment