யார் காதல் வெற்றி பெரும்? ஜோதிட விளக்கம்காதல், திருமணம் எந்தக் கிரக நிலையில் சாத்தியமாகும்?
                                                                         கோபாலகிருஷ்ணன்  நெய்வேலி

     .ஜோதிட சாஸ்திர அடிப்படையில் காதலின் அதிபதி புதன் ஆகும்.சுக்கிரனை காதல் கிரகம் என்று சொன்னாலும் அது காதலை உருவாக்கும் கிரகம்தான் அதாவது காமம் சம்மந்தப்பட்டது காதலில் ஏற்படும் வெற்றித்தால்விகளுக்கு சுக்கிரன் பொறுப்பல்ல  காதலை வெளிப்படுத்தும் கிரகம் கேதுவாகும். புதனுக்கு 1, 2, 5, 9  ஆகிய இடங்களில் கேது  இருந்தால் நிச்சயம் அவன் காதல் வசப்படுவான்.  இந்தப் புதனையும்,  கேதுவையும் குரு அல்லது சுக்கிரன் பார்த்தால் காதல் வெற்றியடையும்,  செவ்வாய் பார்த்தால் தோல்லி அடையும்,  சந்திரன் பார்த்தால் அவமானம் ஏற்படும்.  சனி பார்த்தால் மரணம் ஏற்படும்.இருதார அமைப்பு  என்றால் என்ன?  அதை நீக்க வழி உண்டா?
                                                                                            R.ரமேஷ்  குடியாத்தம்

இருதார அமைப்பு என்பது சந்திரன்,  சுக்கிரன், புதன் ஆகிய பெண் கிரகங்களின் நிலையைப் பொறுத்தே அமைகிறது.  சிலர் திருமண ஸ்தானமான 7வது வீட்டில் அசுப கிரகங்கள் இருந்தாலே இருதார அமைப்போ,  ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இடத்தில் பாலுறவோ ஏற்படும் என்று சொல்கிறார்கள்.  எனது அனுபவத்தைப் பொறத்தவரை இருதார அமைப்பிற்கும் 7வது இடத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றே தோன்றுகிறது.  பிருகு  நாடியில் குரு இருக்கும் ராசிக்கு 1, 2, 3, 5, 7, 9, 11, 12  ஆகிய இடங்களில் சந்திரன், சுக்கிரன், புதன் கிரகங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப் போயிருந்தால் இருதார அமைப்பு ஏற்படும் என்று  சொல்லப்பட்டிருக்கிறது.  அனுபவத்திலும் இது சரியாக இருக்கிறது.  இத்தகைய நிலையை மாற்ற கணபதியின் மூல மந்திரத்தை முறைப்படி ஜெபித்தால் நல்ல பலன் ஏற்படுகிறது.      நமது தளத்திற்கு பதில்பெற ஏராளமான கேள்விகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளது ஒவ்வொன்றாக பதில் சொல்ல சற்று காலதாமதமாகலாம் ஆகவே வாசகர்கள் அன்போடு காத்திருக்கவும் உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் உண்டு சொந்தப்பிரச்சனைக்கான கேள்விகளை பதிவிடமாட்டோம் தாராளமாக தைரியமாக கேட்கலாம் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்
5 comments:

Anonymous said...

காதலுக்கு கண் இல்லை , கிரக நிலை உண்டா? sharmila

Anonymous said...

மேல் நாட்டில் எல்லாமே காதல் கல்யாணம் தான். அப்படி என்றால் மேல் நாட்டில் மொத்த ஜனங்களுக்கும் மிதுன ராசி காரர்களா?

Anonymous said...

அருமை.தங்கள் தளம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

ஸ்ரீ ராமானந்த குருஜி said...

@Anonymous


நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நமது தளத்தில் கேள்விகள் 1000 என்ற பகுதில் வெளியிடப்படும்

ஸ்ரீ ராமானந்த குருஜி said...

@ஆகமக்கடல்


நன்றி

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்