கேள்வி : வாழ்க்கையை விதிதான் செலுத்துகிறது என்பது சரியா?
மணி சென்னை
ஒரு நாளில் காலையில் எழுந்து இரவில் உறங்கும் வரை நம் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவற்றையும் உன்னிப்பாக கவனித்துப் பார்ப்போம், அன்றைய பொழுதில் நம் எண்ணம் அனைத்தும் ஈடேறிவிட்டதா? நினைத்ததும். நினைக்காததும் நடந்திருக்கிறது அல்லவா? இதையெல்லாம் பார்க்கும் போது கண்ணுக்குத் தெரியாத கூட்சும சக்தி ஒன்று எங்கிருந்தோ நமமையெல்லாம் ஆட்டிப் படைக்கிறதன்றோ? அந்தச் சக்திதான் விதி, விதியின் வழிதான் வாழ்க்கை நடந்துவருகிறது,
கேள்வி : வேதாந்தக் கருத்துகளால் ஒருவன் முக்தி அடைய முடியும் என்று கூறப்படுகிறதே? அதைப்பற்றி?
சுந்தர் மலேசியா
தன்னையும். தன்னைச் சூழந்துள்ள அனைத்தையும் ஈஸ்வர சொரூபமாகப் பார்ப்பது தான் வேதாந்தத்தின் இறுதி நிலை, வேதாந்தக் கருத்துகளைப் படிப்பதாலோ விளக்கஉரை செய்வதாலோ அந்த உயரிய அனுபவத்தைப் பெற இயலாது, எனவே வேதாந்தக் கருத்துகளை வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நடைமுறைப்படுத்தி அத்வைத நிலையை உணர்ந்து அதில் கரைந்து. அதாவது உண்ணும் சோறும். பருகும் நீரும். தின்னும் வெற்றிலையும் நாராயணனே என்ற உயரிய இன்பத்தைப் பெற்று எல்லாம்வல்ல ஸ்ரீ இராமபிரானின் பாதத்தில் ஐக்கியமடைய முயல வேண்டும்,

நமது தளத்திற்கு பதில்பெற ஏராளமான கேள்விகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளது ஒவ்வொன்றாக பதில் சொல்ல சற்று காலதாமதமாகலாம் ஆகவே வாசகர்கள் அன்போடு காத்திருக்கவும் உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் உண்டு சொந்தப்பிரச்சனைக்கான கேள்விகளை பதிவிடமாட்டோம் தாராளமாக தைரியமாக கேட்கலாம் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் |
1 comments:
இதுதான்...உண்மை...ஆனால்...முதலில் தவறுகள் செய்து விட்டு...பின்பு..
இறுதியில் சிவனே கதி ..என்று இருப்பதில் என்ன லாபம்..?
Post a Comment