சிவநிலாவின் கேள்விகள்


முத்தமிழ் மன்றம் இணையதளத்திலிருந்து சிவநிலா அம்மையார் என்பவர் கடந்த 18-09-2010 அன்று யோகி ஸ்ரீ ராமானந்த குருவிடம் சில கேள்விகள் கேட்டிருந்தார் அந்தக் கேள்விகளும் அதற்கான குருஜியின் பதில்களும் இதோ உங்கள் முன்னால்...



1.தமக்குள்ளே மறைந்திருக்கும் இன்பத்தை அறியாமல் கோவில் கோவிலாகச் சென்று நிம்மதியைத் தேடும் மனிதர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்னவோ?

   சூரியனுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு வெளிச்சம் தோன்றும் பல நேரங்களில் பிரதிபலிப்பையே நிஜமென்று நம்பி வாழ்க்கை முழுவதும் ஏமாந்து போய்விடுகிறோம் வெளிச்சத்தை சூரியனால்தான் தரமுடியும் என்பது போலவே சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது எனவே கோயில் குளமெல்லாம் போகட்டும் அதில் தப்பில்லை ஆனால் உண்மையான தெளிவை பெற வேண்டுமென்றால் தினசரி கொஞ்ச நேரமேனும் தியானம் செய்யுங்கள் உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஸாகரத்தை தரிசிக்கலாம்


2.அகால மரணம் அடைந்தவர்கள் ஆவியாக மாறி தங்களின் விருப்பம் நிறைவேறும்வரை ஆவியாகத் திரிகிறார்கள் என்ற ஒரு கருத்துக் கிராமப் புறங்களில் இருந்துவருகிறது.ஆவிகள் தொந்தரவால் பூஜை,மந்திரம் எனச் செய்து அவற்றை மண்கலயங்களில் அடக்கி குளத்திற்குள் புதைத்துவைத்து விடுவதாகவும் பின்னொருநாளில் குளத்து நீர் வற்றினால் மனையடியாக நிலத்தை உபயோகிக்கும் போது அந்த ஆவி திரும்பவும் வெளிவர வாய்ப்புள்ளது என்றேல்லாம் கருத்து நிலவி வருகிறது. இது எவ்வளவு தூரம் உண்மை.?அதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?

அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்கள் என்பதை சாஸ்திரம் ஏற்றுக் கொள்ள வில்லை இன்னும் சொல்லப் போனால் கர்மா கொள்கைப்படி அகால மரணம் என்றே எதுவும் நிகழாது எல்லா மரணமுமே விதிப்படித்தான் நடைபெறுகிறது மேலும் மந்திர சாஸ்திரத்தின் படியோ தாந்ரீகப்படியோ பந்தனப்படுத்தப்பட்ட தீயசக்திகளை மண்ணில் புதைப்பது கிடையாது முடியாது இது தவறான தகவலால் ஏற்பட்டிருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கை



3.ஒருவிதமான மனோவசியக் கலை பயின்றவர்கள் இறந்தவர்களுடன் பேசி அதாவது உறவு முறை ஆவி,நல்ல ஆவி என ஏதாவது ஆவிகளுடன் பேசி ஆலோசனை கூறுவதாக செய்திகள் இருந்துவருகின்றன.
இந்தமாதிரி ஆலோசனைகள் ஆவிகளிடமிருந்து பெற முடியுமா?ஆவிகளில் நல்ல ஆவி கெட்ட ஆவி என இருக்கின்றனவா?தெளியப்படுத்துங்களேன்

ஆவிகளோடு பேசும் முறை விஞ்ஞானப்படி நிறுபிக்கப்பட வில்லை என்றாலும் எனது அனுபவத்தை பொறுத்தவரையில் உண்மை என்றே நம்புகிறேன் முன்னோர்களின் ஆத்மா மூலம் பல ஆலோசனைகளைப் பெறலாம் வாழ்க்கச் சவால்களை சமாளித்தும் கொள்ளலம் ஆவிகளில் நல்லவை கெட்டவை என்று உண்டு அது மனிதர்களின் இறப்பை பொறுத்து அமைவதில்லை வாழும் போது பெற்றிருக்கும் குணாதிசையத்தைப் பொறுத்தே அமைகிறது உதாரணமாக நல்லவன் ஒருவன் விபத்தில் இறந்துவிட்டாலும்கூட தீய ஆவியாக மாட்டான்

.

4.கடவுளின் படைப்பில் உடல் ஊனமுற்றவர்களும் உண்டு,அவர்களுக்கு உதவுபவர்களை ஒருசிலர் கடவுளே அவர்களுக்கு முற்பிறவியில் செய்த கொடுமைகளுக்கு தண்டனை வழங்கியுள்ளார்.நீங்கள் உதவி செய்து அத்தண்டனையை சரிவர நிறைவேற்ற விடாமல் செய்து மீண்டும் அவர்களை அடுத்தப் பிறவியிலும் இதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வாய்ப்பளித்து விடாதீர்கள் எனக் கூறுகின்றனர்.இதைப் பற்றிய தங்களின் கருத்து என்ன?

ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவக்கூடாது என இந்துமதச் சாஸ்திரங்கள் எதுவும் கூறவில்லை அப்படி கூறியிருப்பதாக யாராவது சொன்னால் நிச்சயம் அவர்கள் இந்துமதத்தின் நிஜ விரோதியே ஆவார்கள் ஒருவனின் உதவியை பெறுவதன் மூலம் பிறவித்தளை தொடரும் என்றால் பலவிதமான தானங்களைப் பற்றி இந்து தர்மம் கூறுவானேன்? பிறவி பெறுங்கடலை நீந்திக் கடப்பதற்கு அக கட்டுப்பாட்டையும் புறவொழுக்கத்தையும் மட்டுமே வலியுருத்தும் நம்மதம் தானம் பெறுவதையோ தானம் இடுவதையோ தடையாக கூறவில்லை முத்திக்கு வழி சன்னியாச மார்க்கம் என அறிவுருத்தும் இந்துமதம் சன்னியாசிகளைக் கூட ஞான தானம் செய்ய சொல்வது ஏன்? மீண்டும் பிறவி எடுப்பதற்காகவா? எனவே இந்த கருத்து ஆதாரமற்றது



5.மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு நிகராக இருக்கும் ஏகலைவனின் வலது கைக் கட்டை விரலை காணிக்கையாக வேண்டி துரோணாச்சாரியார் பெற்றது சரிதானா,இதைப் பற்றியத் தங்களின் கருத்து என்ன?அரச குமாரர்களைப் போல் அவன் இருக்க நினைக்கவில்லை.ஆயினும் குரு அவ்வாறு பெற்றது ஒரு தனிமனிதனின் [ஏகலைவனின்] தனித்திறமைக்குக் கிடைத்த பரிசா?திறமையினால் கிடைத்த பரிசினை அடைய எதையும் இழக்கலாம் என்ற கருத்திற்கிணங்க இப்படி நிகழ்ந்ததா?விளக்கம் கொடுங்களேன்.

உயர்ந்தக்குலத்தில்தான் அறிவாளிகள் பிறப்பார்கள் என்று நினைத்தால் அது முட்டாள்தனம் என்பதை நிறுபிக்க வந்தவனே ஏகலைவன் தான் குருவாக மதிக்கும் ஒருவன் கட்டளை எதுவாக இருந்தாலும் அதை ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்காமல் நிறைவேற்றுவதே நல்ல மாணவனின் லக்ஷ்யணம் என்பதே தர்மமாகும் பெற்றவர்களைக்கூட மதிப்பது கௌரவக்குறைச்சலாக போய்விட்ட இக்காலத்தில் இந்தக்கருத்து மனித உறிமை விஷயமாகக்கூட விமர்சிக்கப்படலாம் ஆனால் அந்தக்காலம் இப்படியிருக்கவில்லை விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு ஏகலைவன் நல்ல உதாரணம் துரோணர் கட்டை விரலை காணிக்கையாக கேட்டது சரியா தப்பா என்பது வேறு சங்கதி அதைப்பிறகு பேசலாம்

5 கேள்விகள் கேடக நினைத்து நிறையக் கேள்விகள் கேட்டுவிட்டோமோ என்ற ஃபீலிங் ஏற்படுகிறது. என்னமோ உங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியதைக் கேள்வியாகக் கேட்டுள்ளேன்.
கேள்விகள் எதையேனும் மாற்ற வேண்டியிருந்தால் தனிமடலில் தெரியப்படுத்தவும்.
அதன்பின் சுடர் திரியில் பதிவிடுகிறேன்.நீங்கள் பதிலளிக்கலாம்.
மிக்க நன்றி

கருத்துப் பரிமாற்றத்திற்கு நான் எப்போதுமே விருப்முடையவன் இன்னும் பல கேள்விகள் கேட்டால் கூட பதில்தர நான் தயார் ஆனால் நேரம் பலசமயம் ஒத்துழைக்க மறுக்கிறது பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் நாம் நேரத்திற்கு சொந்தக்காரர்களாக இருக்க முடியாது என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன் இவ்வளவு நேரம்உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வாய்ப்பும் நேரமும் வழங்கிய ஸ்ரீகிருஷ்ணனை வணங்குகிறேன்











7 comments:

kalaimoon70 said...

சூரியனுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பித்தால் அதிலிருந்து ஒரு பிரதிபலிப்பு வெளிச்சம் தோன்றும் பல நேரங்களில் பிரதிபலிப்பையே நிஜமென்று நம்பி வாழ்க்கை முழுவதும் ஏமாந்து போய்விடுகிறோம் வெளிச்சத்தை சூரியனால்தான் தரமுடியும் என்பது போலவே சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது எனவே கோயில் குளமெல்லாம் போகட்டும் அதில் தப்பில்லை ஆனால் உண்மையான தெளிவை பெற வேண்டுமென்றால் தினசரி கொஞ்ச நேரமேனும் தியானம் செய்யுங்கள் உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஸாகரத்தை தரிசிக்கலாம்

இந்த பதிலை ரசித்தேன்.உண்மை தான் .இதை நான் அறிந்தும் இருக்கிறேன் நன்றி ஐயா.

உங்களின் கேள்வி பதில்களை,படித்துவருகிறேன்,சில பதில்கள் எனது கொள்கைக்கு முரண்பட்டாலும்,பல கேள்விகள் ,நீங்கள் தரும் பதில்கள் அருமையா இருக்கு .நன்றி தொடருங்கள் ஐயா .

srinihasan said...

நானும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்... நன்றி

இதுபோன்ற கேள்வி பதில்கள் கண்டிப்பாக மனிதன் தன்னை தானே சுயமாக அறிந்துகொள்ள, பின் அதன்படி நடந்து முன்னேற வழிவகுக்கும்...

காகிதன் said...

எத்தனை விடயங்களைச் சுமந்து நிற்கிறது உக்கள் அனுபவம் என்று நோக்கும்போது பெரும் வியப்படைகிறேன் ஐயா. மிகவும் ஆணித்தரமான அற்புதமான பதில்கள். வாழ்த்த வயதில்லை. வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

jayashankar said...

குருஜியின் பதில்கள் அனைத்தும் அருமை....

இருந்தாலும், இந்த ஆவி சமாசாரம்தான் சிறிது ஏற்றுக் கொள்ளும்படியில்லை.

குருஜி அவர்களே!

2 மற்றும் 3 ஆம் கேள்விக்கான பதில்கள் சிறிது முரண்பாடுடன் இருப்பதாகப் படுகின்றதே.

2 ஆம் பதிலில் மரணம் விதிப்படி நடப்பதால் தீய ஆவி என்ற ஒன்று இல்லை என்று கூறி, 3 ஆம் பதிலில் அவரவர் கர்மாவைப் பொறுத்து ஆவியில் நல்ல தீய ஆவிகள் இருக்கின்றது என்று கூறுகின்றீர்கள்.

இதனையும் சிறிது விளக்கினால் நன்றாக இருக்கும் குருஜி.

மற்ற அனைத்துக் கேள்விகளுக்கும் அருமையான பதில். ஏகலைவனிடம் காணிக்கை கேட்டது சரியா தவறா என்பதின் விளக்கம் படிக்க ஆவலாய் உள்ளேன்.

நன்றி குருஜி.

Guruji said...

மற்றொரு பதிவில் மிகவும் விரிவாக காணுவோம்

பரஞ்சோதி » said...

சிவநீலா சகோதரியின் அசத்தல் கேள்விகளுக்கு அருமையாக, யதார்த்தமாக பதில்கள் சொன்ன அய்யாவுக்கு என் வாழ்த்துகள்.

ஆவி சமாச்சாரம், ஏகலைவன் பற்றி மேலும் அறிய ஆவல் கூடுது.

ARR said...


1.தமக்குள்ளே மறைந்திருக்கும் இன்பத்தை அறியாமல் கோவில் கோவிலாகச் சென்று நிம்மதியைத் தேடும் மனிதர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்னவோ?.



சந்தோஷம் நம்மனதிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதை உணர ஞானம் வேண்டும் அறிவை புத்தகத்தின் மூலம் பெற்று விடலாம் ஞானத்தை அனுபவம் மற்றும் உள்ளுணர்வு வழியாகத்தான் பெற முடியும் மனமானது ஒருநிலை படுகின்றவரை ஞானம் பிறக்காது



அருமை லோகிதாசரே..!

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே..!

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்