நீங்களும் ஆவிகளுடன் பேசலாம்

   ன்பு என்னும் பிரவாக ஊற்றை அடைத்து வைப்பதற்கு எந்தக் கதவுகளாலும் இயலாது என்பது தமிழ்கூறும் நல்லுகச் சான்றோர்களின் ஆப்தவாக்கியமாகும்.  அன்பு எப்படி அடைக்க முடியாத சக்தியோ அதே போன்ற சக்திதான் அறிவுத் தாகமும் அறிவுத் தேடலும் ஆகும்.  இயற்கையின் ரகசியங்களை நுண்ணியமாக உணர்ந்து கொள்ள சித்தர் பெருமக்களை வனாந்திரங்களில் அலைய வைத்ததும், மறைந்த தமிழ் இலக்கியங்களை வெளியுலகுக்குக் கொண்டு வர தள்ளாத வயதிலும் நாட்டிலுள்ள மூலை முடுக்குகள் எல்லாம் தமிழ் தாத்தா உ.வே.சாவைச் சுற்றித் திரிய வைத்ததும், நிலாவில் கால் பதிக்க கோடிக் கணக்கான டாலர்களைக் கொட்டி ஆராய்ச்சி செய்ததும் அறிவுத் தேடலே ஆகும்.

    ஆயிரம் பெற்றாலும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டுமென்று மனிதனைப் பேராசை கொள்ளச் செய்வது பணம் மட்டுமல்ல.  அறிவும் கூடத்தான்.  பணத் தேடல் மற்றவர்களின் உயர்வுக்குப் பயன் தராது.  அறிவுத் தேடலோ பெற்றவனை மட்டுமல்ல மற்றவனையும் வாழவைக்கும் அமுதமாகும்.  அறிவுத் தேடல் தான் நவீன உலகத்தில் நவமயமான கண்டுபிடிப்புகளை யெல்லாம் தந்து கொண்டிருக்கிறது.   அறிவு என்று செயல்படாமல் நிற்கிறதோ அன்றே உலகத்தின் இயக்கம் முடிவுக்கு வந்துவிடும்.

    ஒரு ராஜபாட்டையில் நடந்து செல்லும்  போது வழியில் ஆயிரம் ஆயிரம் வண்ணமயமான காட்சிகளை நாம் காண்போம்.  அப்படி நாம் பார்க்கும் சில காட்சிகளுக்குக் காரண காரியம் நமக்குப் புரியும்,  சிலவற்றிற்கு எதுவும் புரியாது.  சில நமக்குத் தெரியாது இருந்தாலும் அந்தக் காட்சியை நம் மனது அழியாமல் பதிவு செய்துவிடும்.  அதே போன்றுதான் அறிவுத் தேடலில் நாம் இறந்தபிறகு எங்கே போகிறோம்.  பிறப்பதற்கு முன்பு எங்கே இருந்து வந்தோம் என்ற கேள்விக்குச் சரியான தெளிவான ஆதாரபூர்வமான பதில் இன்று வரை நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் அந்தப் பதிலைப் பெறுவதற்கு மனித சமுதாயத்தின் ஒரு பகுதியினர் ஒவ்வொரு விநாடியும் இன்று வரை உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  பிறப்பு இறப்பின் ரகசியங்களை மனிதன் முழுமையாக அறிந்து கொண்டான் என்றால் இறைவனின் ரகசியத்தை முழுமையாக நிதர்சனமாக நேருக்கு நேராக நாம் புரிந்து கொள்ள முடியும்.

    மனித சக்திக்கு மேல் எதுவும் இல்லை.  அமானுஷ்யம் ஆன்மீகம் என்பதெல்லாம் வெறும் மாயாவாதம்.  மனித உயிர் சொர்க்கம் மற்றும் நரகத்திற்குச் சென்று பாவபுண்ணியங்களை அனுபவித்து மீண்டும் பிறப்பெடுக்கிறது என்பதெல்லாம் கிடையவே கிடையாது.  ஒரு இரும்புத்துண்டு துருப்பிடித்து அழித்து விடுவது போல், ஒரு கல் தூள் தூளாகி சிதைந்து மறைவது போல், உயிரும் அழுகிப்போகும் உடலோடு அழிந்து விடுகிறது.  புதிதாக ரசாயன சேர்க்கையின் மூலம் உடல் உற்பத்தியாகும் போது புதிய உயிர் ஒன்று தாமாகவே முளைக்கிறது.  அவ்வளவுதான் உயிரைப் பற்றிய விஷயம் மறுஉலகம், மறுஜென்மம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்கிறார்கள் நாத்திகவாதிகள்.

    நாத்திகவாதிகளின் அடுக்கடுக்கான கேள்விகள் பலவற்றிற்கு நம்மால்திருப்தியான பதிலைத் தர முடியவில்லை என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.  காரணம் எதை எடுத்தாலும் இல்லை இல்லை என்று சொல்பனை எந்தப் பதிலாலும் எந்த ஆதாரத்தாலும் திருப்திப்படுத்திவிட முடியாது.  மற்றவர்களளைத் திருப்பதிப்படுத்த முடியாது என்பதனால் நமது அறிவுத் தேடலையும் நம்மால் நிறுத்தி விடமுடியாது.  காலம் காலமாக நமது ஞானிகளும் ரிஷிகளும் அறிவுக்கு அப்பாற்பட்ட சாதாரண புலன்களால்அனுமானம் செய்ய முடியாத பல வியங்களை நேருக்கு நேராகத்  தங்களது ஞான வைராக்யத்தால் கண்டிருக்கிறார்கள்.  அப்படிக் கண்ட பல ரகசியார்த்தங்களை நமக்கு ஆதாரங்களாக விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  அவைகளை இருட்டில் ஒளிதரும் ஞானதீபங்களாக நாம் பயன்படுத்தி நமது பயணத்தைத் தொடரும் போது அடைத்து கிடக்கும் எத்தனையோ ரகசியக் கதவுகள் நமக்காகத் திறக்கும்.

    அப்படித் திறக்கப்பட்ட கதவுகளில் மறு ஜென்மத்தைப் பற்றி விஷயம் ஆரம்பக் காலங்களில் நகைப்பிற்கும் நையாண்டிக்கும் உரித்தான விஷயம் என்று கருதின காலம் போய் இன்று விஞ்ஞானத்துறை ஆமாம் மறுஜென்மம் இருக்கலாம் என்று ஒத்துக்கொள்ளும் அளவிற்கு வந்திருக்கிறது.  எதையுமே காலாகாலத்தில் ஏற்றுக் கொள்ளாமல் பட்டறிவு பெற்ற பின்பே ஏற்றுக் கொள்வது மனித சுபாவம் என்பதனால் விஞ்ஞானத்தின் ;இந்தக் காலம் தவறிய ஞானத்திற்காக மன்னிக்கலாம்.  வருங்காலத்தில் விஞ்ஞானம் இன்னும் வளர்ச்சியடையும் போது மெய்ஞானத்தில் குறிப்பிடப்படும் அனைத்து விஷயங்களும் உண்மையானது தான் எனப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் சூழ்நிலை மிகக் கண்டிப்பாக ஏற்படும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

    சொர்க்கம், நரகம், மறுபிறப்பு, புண்ணிய லோகம் இவைகளைப் பற்றி எளிமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்று எத்தனையோ போர்ஆர்வத்துடன் இருந்தாலும் அதற்கான வழிகாட்டிகள் சுலபமாகக் கிடைக்காததனால் பல ஆர்வலர்கள் வழி தவறிப் போகக் கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது.  இதனால் நாஸ்திகவாதம் வலுப்பெறுகிறது என்பதை விட ஆஸ்திகத்தில் புதிய விஷயங்கள் வெளிவராமல் போகும் துயரம் ஏற்பட்டு விடுகிறது.

    அந்த நிலையை மாற்ற மிகக் கடினமான பிறப்பு இறப்பு ரகசியத்தைப் பற்றிய கருத்துக்களை மிக எளிய முறையில் இந்தப் தளத்தொடரில்  சொல்ல தான் முயன்றிருக்கிறேன்.  சொல்ல வந்தா விஷயத்தை முழுமையாக  கூறி விடவில்லை யென்றாலும் பெருவாரியான நம்பிக்கைகளுக்கும் சாஸ்திர கருத்துக்களுக்கும் ஓரளவு ஆதாரங்களைத் தந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

    இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடுவில் உள்ள விஷயங்கள் இன்னும் எவ்வளவோ மறைந்தும் கிடக்கிறது.  சொல்லப்படாமலும் இருக்கிறது.  அவைகளையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு முழுமையான நூலாகத் தரவேண்டும் என்ற என் அவா வருங்காலத்தில் கண்டிப்பாக நிறைவேறும் என்றாலும் யானையின் மணியோசை போல் இந்தச் சிறய தொடர்  மக்களில் அமானுஷ்ய அறிவுத் தாகத்திற்கும் நிச்சயம் ஒரளவு பயன்பெறும் என்று உறுதியாகக் கருதுகிறேன்.  காரணம் இதுவரை அமானுஷ்ய துறையில் வெளிவந்துள்ள மற்ற நூல்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு பண்டைய கால சமய நூல்களையும் சாஸ்திர நூல்களையும் சரித்திர நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.  அதனால் பழமையான விஷயத்தை புதுமையான நோக்கில் தந்திருப்பதனாலும் மேல் நாட்டு ஆதாரங்கள் அதிகமாக இல்லாமல்  நமது உள்ளூரில் நாம் சந்திக்கும் அன்றாடம் நடைமுறையில் உள்ளவற்றில் அமானுஷ்யத்தைப் பிரித்துக்காட்டி இருப்பதனாலும் மேற்கூய நம்பிக்கையை என்னால் கொள்ள முடிகிறது.

    இந்த தளத் தொடரை  படிக்கும் அன்பர்கள்  இதில் உள்ள விஷயங்களே முடிவான முடிவுகள் என்று கொள்ள வேண்டியதில்லை. இதில் சொல்லப்படாத அல்லது விட்டுப் போன பல ஆதார உண்மைகளும் இருக்கலாம்.  அவைகள் இதில் சொல்லப் பட்டிருப்பவற்றை விட சக்திவாய்ந்த வைகளாகவும் இருக்கலாம். அப்படி சக்தி வாய்ந்த கருத்துக்கள் ஆதாரங்கள் எவையேனும் வாசகர்களிடம் இருந்தால் அதை என்னிடம் தந்தால் வருங்கால ஆராய்ச்சிக்குப் பயன்படும் என்று கருதுகிறேன்.

இந்தத் தொடரில் இன்னொறு வாய்ப்பும் வாசகர்களுக்கு அமையும் என்று என்னால் உறுதி சொல்ல முடியும் ஆவிகளைப் பற்றிய என் அனுபவங்களை மட்டுமல்ல அவைகளோடு பேசுவதற்கு நான் எடுத்துக் கொண்ட பயிற்சி முறைகளையும் பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன் அதனால் நீங்கள் கூட ஆவிகளோடு பேசும் முறையை தெரிந்துக் கொண்டு ஆவிகளோடு நேரிடையாகப் பேசலாம் உங்கள் வாழ்கைச் சிக்கலுக்கு நீங்களே தீர்வு கண்டுக் கொள்ளலாம்


    மேலும் நான் சொல்லச் சொல்ல தொடர்ச்சியாக இதை எழுதய எனது சிஷ்யப் பிள்ளைகளான சந்தானம்,வெங்கட்டரமணன்,கோவிந்தசாமி,சதீஷ் குமார் ஆகியோரும் இந்நூலுக்கான அஸ்திவாரக்கல் என்றால் மிகையாகாது.  இவர்கள் அனைவரும் ஸ்ரீ நாராயணனின் அனுக்கிரகத்தை வருங்காலத்தில் ஆத்மபூர்வமாக உணர பிராத்தனை செய்து ஆசீர்வதிக்கிறேன்.

இனி தொடருக்குள் செல்வோம்


                                                                                          தொடரும் .....................


2 comments:

sabari said...

Gurujikku yenna vanakam na ithai thagalida therinthu kollamudiuma yenaku sollitharugal

Sabari

Chennai

ஸ்ரீ ராமானந்த குருஜி said...

@sabari


தொடர்பு கொள்ளுங்கள் +91-9442426434

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்