பிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கலாமா...?



  பொதுவாக நமது இந்தியாவில் குழந்தை பிறந்த ஒரு வருடம் வரையில் அக்குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுவது கிடையாது. இன்றைக்குச் சிலர் ஆர்வக் கோளாறினால் உடனடியாகக் கணித்து பலன்களைப் பார்ப்பது முற்றிலும் தவறுதலான, சாஸ்திர விரோதமான காரியமாகும்.


  பிறந்த குழந்தைகள் ஒரு வயது பூர்த்தி அடையும் வரை நமக்குச் சொந்தமானது அல்ல. முற்றிலும் கடவுளுக்குச் சொந்த மானது என்று பழங்கால ஏடுகள் பல குறிப்பிடுகிறது. அதாவது ஆன்மீக முயற்சியல் முக்தியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீவன் கர்ம வினையால் திடீரென்று மரணத்தைத் தழுவும் போது தங்களது பூர்வ கர்மாவை நிறைவு செய்வதற்கு இப்போது பிறந்திருக்கலாம். தங்களது கர்மாவை கர்ப்பவாசத்திலோ அல்லது ஜனனம் ஆகி ஒரு வயதைப் பூரணமாக நிறைவு செய்வதற்கு முன்போ தங்களது லட்சியமான முக்தியை நோக்கி மீண்டும் புறப்பட்டுச் சென்று விடலாம்.

  அதனால் தான் ஒரு வயது பூர்த்தியான பிறகே குழந்தை பெற்றவர்களுக்குச் சொந்தம் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. இப்படி ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்பே இறைவனின் திருவடிகளை அடைந்துவிடும் அல்லது அடைய சாத்தியமுடைய குழந்தைகளின் ஜாதகத்தை பாலாஷ்ட தோஷ ஜாதகம் என்று கூறுகிறார்கள்.



இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.

 லக்னத்திற்கு 6,8 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தாலும் அல்லது அந்த இடங்களை பாவ கிரகங்கள் பார்த்தாலும் ஐந்தாமிடத்தில் சனி, ராகு, கேது இருந்தாலும், சூரியன் நீச்சம் பெற்று 9ஆம் இடத்தில் இருந்தாலும் தேய்பிறைச் சந்திரன், சூரியன், சனி, செவ்வாய், 9, 12, 1 ஆகிய இடங்களில் குரு பார்வை இல்லாமல் இருந்தாலும், விருச்சிக லக்னமாக இருந்து முன் பகுதியில் உள்ள 6 இடங்களில் பாவக்கிரகங்கள் வரிசை பெற்றும் பின்னால் உள்ள 6 இடங்களில் சுபக்கிரகங்கள் வரிசை பெற்று இருந்தாலும், பாலாஷ்ட தோஷ ஜாதகம் என்று சொல்லலாம்

source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_30.html







0 comments:

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்