கேள்வி : நாஸ்திகன், ஆஸ்திகன் இருவரையும் ஒன்றாகத்தான் இறைவன் நடத்துவாரா?
சதாசிவம் ஓமன்
உலக ஜீவன்கள் அனைத்தையும் சமமாகப் பாவிப்பவன். இறைவன், கண்ணுக்குத் தெரியாத அமீபா முதல் மனிதன் வரை அவன் படைத்திருப்பது அவ்வுயிர்கள் தன்னை வழிபட வேண்டுமென்றோ. போற்றிப் புகழ வேண்டுமென்றோ படைக்கவில்லை, அதனதன் சுயதர்மத்தை உணர்ந்து அனைத்து ஜீவன்களும் நடக்க வேண்டும் என அவன் விரும்புகிறான், எனவே நம்பிக்கை உடையவர்கள். இல்லாதவர்கள் என்ற பேதம் அவனுக்கு இல்லை, இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் தனது கடேசி மூச்சுவரை கடவுளை இல்லை என்று மறுத்த பெரியாரும் கடவுளிடமே தன்னை முழுமையாக அற்பனித்து வாழ்ந்த ரமணரும் காந்தியும் கூட இறைவனின் திருவுள்ளத்தின் முன்னால் சமம்தான் மனிதர்களுக்குத்தான் விருப்பு வெறுப்பு உண்டேத் தவிற ஆண்டவனுக்கு துளியும் கிடையாது இங்கு நாஸ்திகள் என்பவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று பார்க்கக் கூடாது, எவனொருவன் தன்மீதும் தன் முயற்சியின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறானோ அவனே நாஸ்திகன், அப்படிப்பட்டவன் இறைவன் சந்நிதானத்தில் இருந்தும். பூஜைக்கு உதவாத பூவுக்குச் சமமாவான்,
கேள்வி : பெரும்பாலான நல்லவர்கள் தங்கள் ஆயுள் முழுவதும் துன்பப்படுவது ஏன்?
நாராயணன் சிங்கப்பூர்
நாராயணன் சிங்கப்பூர்
எப்போதுமே நமக்குச் சங்கடம் தருவனவற்றைத் துன்பம் என்கிறோம், சந்தோஷம் தருவனவற்றை இன்பம் என்கிறோம், வாழ்வில் பலமுனைகளில் போராடி வெற்றி பெறும்போது நம்மால்தான் இந்த வெற்றி அடைந்தோம் என எண்ணி கர்வப்படுகிறோம், மாறாக தோல்வி அடைந்தாலோ என்ன பாவம் செய்தேன் நான் ஏன் எனக்கு தோல்வியைத் தந்தாய் இறைவா எனக் கூவி இறைவன் மீது பழிபோடுகிறோம். இதுதான் மனித இயல்பு, இன்பத்தில் இறைவனுக்கு நன்றி கூறாதவன் துன்பத்தில் மட்டும் இறைவன் மீது பழிபோடுவது ஏன்? நீங்கள் கேட்டது நல்லவர்கள் துன்பப்படுவது ஏன் என்றுதானே? ஒருவன் நல்லவன் கெட்டவன் என நாம் எப்படி முடிவு செய்ய முடியும்? அவனவனுக்கு அவனவன் நல்லவனே, யாராவது தன்னைத் தீயவன் என்று கூறிக்கொள்கிறார்களா? கொலைகாரன் கூட தனக்கென ஒரு நியாயம் வைத்திருப்பான், நல்லவன் கெட்டவன் என்று யாரும் இல்லை, நன்மைக்குள் தீமையும் தீமைக்குள் நன்மையும் கலந்தே இருப்பதுதான் கடவுளின் சிருஷ்ட்டி யாரும் முழுமையான கெட்டவனாகவோ நல்லவனாகவே இருக்க இயலாது அதேப் போலவே எந்தவொறு மனித வாழ்விலும் துன்பம் மட்டுமேதான் வந்துள்ளது என்று சொல்லவும் முடியாது புற்றுநோயாளியின் வாழ்க்கையிலும் வசந்தம் உண்டு இன்பம். துன்பம் என்று எதுவும் இல்லை, ஒவ்வொன்னையும் நாம் எடுத்துக் கொள்ளும் மன நிலையைப் பொருத்தே உள்ளது,
source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_19.html
source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_19.html
0 comments:
Post a Comment