ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?

கேள்வி : ஆவியுலகம் என ஒன்று உண்டா? ஆவிகளோடு தொடர்பு கொள்ள முடியுமா?
                                                                                 பாலசுப்ரமணியன் சென்னை 

    உண்டு, தொடர்பு கொள்ளலாம், ஸ்தூல சரீரம். சூட்சும சரீரம். காரண சரீரம் என்று 3 சரீரங்களால் ஆனது தான் மனிதன் உருவம், இதில்

             ஸ்தூல சரீரம்   - கண்ணுக்குத் தெரிந்த மனித சரீரம்,
             சூட்சும சரீரம்    - கண்ணுக்குத் தெரியாத மனித சரீரம்,
             காரண சரீரம்    - ஸ்தூல சரீரம் + சூட்சும சரீரம்
       ஸ்தூல சரீரம் அழிவதே மரணம், சூட்சும சரீரம் அவ்வளவு சீக்கிரம் அழிவதில்லை, அந்த சூட்சும சரீரத்தையே ஆவி என்கிறோம், மறுபிறப்பு எடுக்கும் வரையில் அந்த சரீரம் வசிக்கும் இடமே ஆவி உலகம் என்று அழைக்கப்டுகிறது, அந்த ஆவியுலகத்தில் இருப்பவர்களை சில மந்திரப்பிரயோகம் மூலமாகவும். வேறு சில வழிகளிலும் அழைத்துப் பேசலாம், பொதுவாக எந்த ஆவியாலும் நன்மையையோ. தீமையையோ செய்ய இயலாது, நமக்குப் புலப்படாத சில விஷயங்களைத் தெளிவுபடுத்த மட்டுமே முடியும், உதாரணமாக திருமணமாகாத ஒருவனுக்கு திருமணத்தை நடத்திவைக்க ஆவி உலகத்தில் உள்ள ஆவியால் செய்ய இயலாது, திருமணத் தடைக்கான காரணம் கூறி அதை நிவர்த்திக்க மட்டுமே வழிகாட்ட முடியும், எனவே ஆவி உலகம் உள்ளது, அதை நல்ல வழியில் பயன்படுத்தி நம் வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்வோம், மிக உயர்ந்த புனிதமாக வாழ்ந்த மகான்கள் அவர்கள் விரும்பினால் மட்டும் பேசமுடியும்.


     நமது தளத்திற்கு பதில்பெற ஏராளமான கேள்விகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளது ஒவ்வொன்றாக பதில் சொல்ல சற்று காலதாமதமாகலாம் ஆகவே வாசகர்கள் அன்போடு காத்திருக்கவும் உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் உண்டு சொந்தப்பிரச்சனைக்கான கேள்விகளை பதிவிடமாட்டோம் தாராளமாக தைரியமாக கேட்கலாம் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்
0 comments:

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்