இந்து மதத்தில் மட்டும் ஜாதிப் பிரிவுகள் இருப்பது ஏன்?


கேள்வி : இந்து மதத்தில் மட்டும் ஜாதிப் பிரிவுகள் இருப்பது ஏன்?
                                                                  பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

    பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் என்று ஒருபோதும் கூறப்படவில்லை, பகவத் கீதையில் கருணைக் கடலான கண்ணபிரான் நான்கு வருணங்கள் பற்றிக் குறிப்பிடுகிறான், எதன் அடிப்படையில் என்றால்.


-     உழைப்பால் நாட்டை உயர்த்தி அல்லும் பகலும்
      சமுதாயத்தின் தேவைக்காகவும் ஓய்வென்பதே இல்லாமல்
      தன்னலம் மறந்து பிறர் நலம் காத்து அனைத்துச்
      செயல்களுக்கும் சூத்திரமாக இருப்பவனே சூத்திரன்,

-    மக்களின் தேவைக்காகவும் நாட்டின் பொருளாதார
     மேம்பாட்டுக்காகவும் தன் உடல். பொருள். ஆவி
    அனைத்தையும் அர்ப்பணித்துப் பாடுபடுபவன் வைசிகன்,

-    தன்னை வருத்தி பிறருக்காக எதையும் செய்யக்கூடிய
     தியாகபுத்தியும் தைரிய சிந்தனையும் யாரிடம் இருக்கிறதோ
    அவன் சத்ரியன்,

-    தான் கற்ற கல்வி ஞானத்தை பிறருக்குப் போதித்து
     அவ்வாறு போதித்த வண்ணம் வாழ்பவனே பிராமணன்


    இவைதான் இந்துமதத்தில் கூறப்பட்டிருக்கும் ஜாதிப் பிரிவுகள், இதில் சூத்திரனுக்குப் பிறப்பவன் பிராமணன் ஆகலாம்,  பிரம்மனணுக்கு பிறப்பவன் சூத்திரன்  ஆகலாம், இப்படிப்பட்ட ஜாதிப் பிரிவுகள் இன்று உலகத்தில் உள்ளனவா? இல்லையே! இதைத்தான் கலிமுற்றிவிட்டது என்று கூறுகிறோம், அதனால்தான் அதர்மம் தலைதூக்கி நிற்கிறது, ஆனால் ஒன்றுமட்டும் உண்மை,

“ தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
    தர்மம் மறுபடியும் வெல்லும் ”

   என்ற வரிகள்படி முறையான முன்னேற்றத்தை அடையத் தடையாயிருக்கும் ஜாதிப்பிரிவுகள் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன, ஒருமைப்பாடு இன்னும் வளரவேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.


2 comments:

கோவி.கண்ணன் said...

//இதில் சூத்திரனுக்குப் பிறப்பவன் பிராமணன் ஆகலாம், பிரம்மனணுக்கு பிறப்பவன் சூத்திரன் ஆகலாம்,//

இப்படி எத்தினி பேர் எந்த காலத்தில் மாறி இருக்கிறார்கள் ?

Anonymous said...

Most of the people in India love to have their kids to be settled in the same profession. The same is true even after marriages.

That's why the varnashram is specific to people based on their profession.

Even today we can claim that we are deviating from varnashrama. But it is not true.

Most of the politician prefers their son to be a politician or their Son-in-Law to be a politician. The same thing is applicable for doctors, engineers, or government employees.

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்