காமத்தை கட்டுபடுத்த முடியுமா ? எப்படி?


காமத்தை கட்டுபடுத்த முடியுமா ? எப்படி?
முனிவர்கள் காமத்தை கட்டுபடுத்தி எப்படி பல ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
                                                                                             அருண் பிரசாத், திருப்பூர்.

    காமம் என்பது உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான உணர்வாகும் காமம் இழுத்த இழுப்புக்களுக்கெல்லாம் மற்ற உயிர்கள் உடன் பட்டு அடிமையாய் கிடக்கும் போது மனிதன் மட்டும் தான் அதை எதிர்த்து போராடி ஆறாவது அறிவை வளப்படுத்திக் கொண்டு வருகிறான் அதை எதிர்க்க முடியாமல் மண்டியிட்ட மனிதர்கள் யாரும் நிரந்தர வெற்றிமாலை சூடமுடியாது காமத்தை எதிர்த்து போராட்டம் என்பது அதனுடன் நேருக்கு நேராக நடத்தும் யுத்தமல்ல அது வரும்வழியை விட்டுவிட்டு மாற்றுப்பாதையில் நம்பயணத்தை துவங்க வேண்டும் அதாவது காமத்தை அடக்க முயற்ச்சிக்காமல் கடக்க முயற்ச்சிக்க வேண்டும் 24 மணிநேரமும் காமத்தை அடக்கவேண்டுமென நினைத்துக் கொண்டிருப்பதே ஒரு சுமைதான் அது நமக்குள் இருப்பதை மறந்துவிட்டு அல்லது ஊதாசீனப்படுத்தி விட்டு வேலையை கவனியுங்கள் தானாக சரியாகிவிடும் முனிவர்களும் இதைத்தான் செய்தார்கள் கூடவே உடலையும் மனதையும் கட்டுக்குள் வைக்கும் சில யோகாசனங்கள் செய்தார்கள் காரம் உப்பு புளி போன்ற சுவைகளை குறைத்தும் கொண்டர்கள்



உயிர்பலியிடுவதை இறைவன் ஏற்றுக் கொள்கிறானா?
                                                                             மணிகண்டன்  பர்மா
   றைவன் எதையும் ஏற்பதுமில்லை. மறுப்பதுமில்லை, அவன் படைத்த பொருளையே அவனுக்குக் கொடுத்ததாக நாம் கற்பனை செய்து திருப்திபட்டுக் கொள்கிறோம், இறைவனின் முன்னால் மாமிசமும். மலரும் ஒன்றுதான், நம்முடைய மனோபாவத்தில் தான் வேறுபாடு உள்ளது, நான் முன்பு கூறியது போன்று பலியிடுதல் விஷயம் தாந்திரீக வேள்விகளுக்கும் வேறுசில வேள்விகளுக்கும் மட்டும் உள்ளது, அது வேறு விஷயம், ஆலயங்களில் பலியிடுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை, எனவே ஆலயத்தில் பலியிடுவது கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒன்றாகும், அந்த பலியிடுவதற்குப் பதில் மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி இறைவனின் அருளை நிச்சயம் பெறலாம்,






     நமது தளத்திற்கு பதில்பெற ஏராளமான கேள்விகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளது ஒவ்வொன்றாக பதில் சொல்ல சற்று காலதாமதமாகலாம் ஆகவே வாசகர்கள் அன்போடு காத்திருக்கவும் உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் உண்டு சொந்தப்பிரச்சனைக்கான கேள்விகளை பதிவிடமாட்டோம் தாராளமாக தைரியமாக கேட்கலாம் ரகசியங்கள் பாதுகாக்கப்படும்



0 comments:

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்