அண்ட வெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால் வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையைக் கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது. சனி நரம்பு மண்டலத்தையும், புதன் சுவாசத்தையும் கட்டுப் படுத்துகிறது. அதே போன்று செவ்வாய் கிரகம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும் ஆட்சி செய்கிறது.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது.
இதுதான் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பே தவிர மற்றபடி மணமக்கள் பிரிந்து விடுவார்கள், இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகளாகும். கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டும் செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்குத் தோஷம் இல்லாமல் இருந்தும் கூட அவர்கள் பல காலம் நல்லவிதத்தில் இணைபிரியாமல் குடும்பம் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்.
பொதுவாக லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என்று கருதப்படுகிறது. ஆனால் இது பொதுவான கணக்கே தவிர சரியான கணக்கு அல்ல. செவ்வாய் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும் மகர ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும் கடக ராசியில் நீச்சம் பெற்று இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இது தவிர குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து இருந்தாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது மேற்குறிப்பிட்ட கிரகங்கள் செவ்வாயைப் பார்த்தலோ செவ்வாய் தோஷம் கண்டிப்பாகக் கிடையாது. அதே நேரம் செவ்வாயின் நட்புக் திரகங்களான சூரியன், சந்திரன், குரு ஆகியவற்றின் ராசிகளான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்குச் செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் என்பதே கிடையாது. இந்தக் கணக்குகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஆயிரத்தில் ஒருவருக்குத் செவ்வாய் தோஷம் உண்டு. மற்றவர்கள் அதை நினைத்துப் பயப்படுவது வீண் கற்பனையாகும் ரத்த சம்மந்த பட்ட தோஷம் என்பதால் பரிகாரம் செய்வதால் எந்த பயனும் இல்லை..
6 comments:
செவ்வாய் தோஷத்தை பற்றி நான் நிறைய படித்திருந்தாலும் அவைகளில் பயமுறுத்தல்கள்தான் நிறைய இருக்கும். ஆனால் உங்கள் கட்டுரை மனநிறைவை தருகிறது. நன்றி.
செவ்வாய் தோஷம் பற்றிய வித்யாசமான விளக்கம்.தங்கள் கருத்துக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய விஷயம்.எது எப்படியோ மக்கள் இந்த சாஸ்திரம் மூலம் நன்மை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்
தங்களிடம் எனக்கு பிடித்திருக்கும் விடயம் இது தான் தனிய அன்மீகம் என்ற மதப்பிரச்சாரம் செய்பவருக்கு இடையில் எம்மை போன்ற மத எதிர்ப்பாளரை உங்கள் அக்கங்கள் கவர்ந்திருக்கிறது... காரணம் தாங்கள் பின் பற்றும் கடவுளை மட்டும் புகழாமல் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எடுத்தியம்பு கிறீர்கள்...
செவ்வாய் தோஷம் பற்றிய தங்கள் விளக்கம்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தங்கள் பதிவில் 'செவ்வாய் தோஷம்' என்ற
வார்த்தைகளுக்கு பதிலாக 'சிவப்பணுக்கள் குறைவாக' உள்ள
ஜாதகம் என்று படித்த போது பல ஐயங்கள் எழுகின்றன.
'சிவப்பணுக்கள் குறைபாட்டிற்க்கு' ஜாதக ரீதியாக
எந்த பரிகாரமும் இல்லை என்ற தங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.
ஜாதகத்தில் 2,4,7,8,12 -ல் உள்ள செவ்வாய், ஆட்சியாக
இருந்தாலோ,குருவின் பார்வை கிடைத்தாலோ அல்லது நட்பு கிரஹங்களின்
வீட்டில் இருந்தாலோ 'சிவப்பணுக்கள் குறை' நீங்கி விடுமா?
செவ்வாய் தோஷம் ரத்தம் தொடர்புடையது என்பதால்
சிவப்பணுக்கள் குறைவாக உள்ள இரண்டு ஜாதகங்கள் இணையும் போது
ஆரோக்யமான வம்ச விருத்தி உறுதி செய்யப்படுகிறதா?
நடை முறையில், செவ்வாய் தோஷத்துக்கு ஜோதிட நூல்கள் கூறும் விதி விலக்குகள்
ஏனோ பொருந்துவதில்லை.
1ல் இடத்தில் இருந்தாலும் தோஷம் உள்ளதா?
Negative Blood Group Irupavarkaluku Sevai thosam irukum endru solkirarkalae athu unmaiaa?
Post a Comment