தாலியை மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?



கேள்வி : திருமண வைபத்தின் போது தாலியை மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் என்ன?
                                                                                          சங்கர் துபாய்
   முன்பின் அறிமுகமில்லாத இரண்டு ஜீவன்கள் இணைவதுதான் உண்மையான திருமணம், இத்திருமணத்தை (1) இறைவன் சாட்சியாகவும் (2) பெரியவர்கள் சாட்சியாகவும் (3) தன்னுடைய மனசாட்சியைக் கொண்டும் ஓர் ஆண் மகன் தாலியைக் கட்டுகிறான், இந்த மூன்று சாட்சிகளை மூன்று முடிச்சுகளாக உருவகப்படுத்துவதே தாலி கட்டுவதன் அர்த்தமாகும்.




 கேள்வி : திருமணத்தன்று மணமக்கள் மெட்டி அணிவதன் தத்துவம் என்ன?
                                                                                                              கோமதி திருச்சி

   திருமணமானவர்கள் என்று உலகத்தார்க்குத் தெரிவிப்பதற்கு மட்டுமன்றி கால் கட்டை விரலுக்கு அடுத்ததாக உள்ள விரலில் உள்ள நரம்பு மூளையோடு இணைந்து பாலுணர்வைத் தூண்டுகிறது என்பதற்காகவும் அணியப்படுகிறது, அந்த நரம்பு வெள்ளி உலோகத்தால் தூண்டப்படுமத் போது கணவன் - மனைவி இடையேயான தாம்பத்ய உறவை நெறிப்படுத்தி அவர்களைத் திருப்தியுறச் செய்கிறது.





2 comments:

logeshkumar said...

எளிமையான விளக்கம் மிக்க மகழ்ச்சி
நன்றி,

Er.L.c.nathan said...

NALLA VILAKKAM,NANTRI

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்