சனி தோஷம் விரட்டும் நீலபானு

  நான் கடந்த 2 வருடமாக பெரிதும் அவதியை அனுபவித்து வருகிறேன், ஐயா. திடீர். திடீர் என்று என் அடிவயிற்றிலிருந்து ஒரு நெருப்பு பந்து கிளம்பி மார்பை அடைத்துக் கொள்கிறது, அந்த நேரத்தில் என்னால் மூச்சு விடமுடியவில்லை, உட்காரவும் முடியாமல். படுக்கவும் முடியாமல் நான் பெரும் அவஸ்த்தை படுகிறேன், கொதிக்கும் எண்ணையை உடல் எல்லாம் கொட்டியது போல் திகு. திகுவென எரிகிறது நாக்கு வறள்கிறது விழி பிதுங்கி கீழே விழுந்து விடும்போல் இருக்கிறது,
    நான் பார்க்காத மருத்துவர் இல்லை பண்ணாத வைத்தியம் இல்லை எத்தனை செய்தாலும் இந்த கடும் அவஸ்த்தையிலிருந்து விடுபடுவதற்கு வழியும தெரியவில்லை மார்க்கமும் புரியவில்லை, இந்த அவஸ்த்தையை தொடர்ந்து பார்த்து வரும என் பிள்ளைகள் சலித்துப்போய் நான் வேண்டுமென்றே இப்படி நடிக்கிறேன் என்கிறார்கள், காரணம் எல்லா டாக்டர்களும் உனக்கு எந்த நோயும் இல்லை என்று கூறிவிட்டார்கள் என்று திக்கித் திணறி அந்த அம்மையார் சொன்னார்,

   அவரின் பரிதாபகரமான நிலை. அவர் பேசியவிதம் கல்லுக்குள் கூட ஈரத்தை கசிய வைக்கும், அவரின் நாடியை பரிசோதித்தால் வாதம். பித்தம். சிலேத்துமம் ஆகியவைகள் சமச்சீராகவே ஆரோக்கியமான நிலையில் இருந்தது, உடலில் எந்தவிதமான கோளாறும் இல்லை, பின் வேறு எப்படி இந்த தொல்லை அவருக்கு ஏற்படுகிறது என்று ஆராய முற்பட்டேன் அதனால் அவருக்காக ஓர் தேவதையை அழைத்து அம்மையாரின் பிரச்சனை என்ன என்று கேட்டேன்,
இவரின் இளம் பிராயத்தில் அதாவது நாற்பது ஆண்டுகளுக்கு முன் வேறு மனிதன் ஒருவனால் வசியமை உணவில் இவருக்கு கொடுக்கப்பட்டதாகவும். அந்த மையின் மந்திர வீரியம் மட்டும் இவர் கணவர் மூலம் தடை செய்யப்பட்டதாகவும் மையின் மற்றப்பகுதிகள் உடலில் இருந்து இவருக்கு தொல்லையை தந்து கொண்டு இருப்பதாகவும் தேவதை கூறியது,

  நான் அந்த அம்மையாரிடம் கேட்டேன் உங்களது இருபதாவது வயதில் வலுக்கட்டாயமாக உங்களை விரும்பியது யார்? இந்த கேள்வி நான் கேட்கவும் ஆயிரம் அம்புகளால் தாக்கப்பட்டது போல் துணுக்குற்று அவர் என்னை பார்த்தார், சில நிமிட மவுனத்திற்குப்பின் அம்மையார் குலுங்கு குலுங்கி அழ ஆரம்பித்தார், அவரின் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் இந்த சமூகம் பெண்களை எப்படி போக பொருளாக கருதி வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது என்ற நிதர்சனத்தை சொல்லாமல் சொல்லியது,

     ஆமாம் சாமி எனக்கு அப்போது திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தது, எங்கள் ஊர் மிராசுதார் நிலத்தில்தான் விவசாயகூலி வேலையை என் கணவர் பார்த்தார், அந்த மிராசுதார் என்னை தவறான நோக்கித்தில் பலமுறை பார்த்து இருக்கிறார், நான் அதை சட்டை செய்வது இல்லை, வயதான மனிதன் நம்மை என்ன செய்துவிடப் போகிறான் என்ற எண்ணத்தில் அவரை பலமுறை உதாசீனப்படுத்தி இருக்கிறேன், ஒருமுறை அவர் என் கணவரை வைத்துக்கொண்டே அவர் வீட்டிலிருந்து வந்த பலகாரம் ஒன்றை சாப்பிடக் கொடுத்தார், என் கணவர் முன்பாகவே அதை தந்ததனால் என்னால் அதை தவிர்க்க இயலாமல் வாங்கி சாப்பிட்டேன், ஒரு வாரத்தில் என் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டது போல் தோன்றியது,
    திடீர் திடீர் என்று மயக்கம் வந்தது இனம் புரியாத கனவுகள் மனதில் பல குழப்பங்கள் ஏற்பட்டன, இரவில் உறக்கத்தில் ஏதேதோ உளறினேன், இதை கவனித்த என் கணவர் என்னை ஒரு பூசாரியிடம் கூட்டிச் சென்று மந்தரித்து தாயத்து கொடுத்தார், அதன்பின் எனக்கு மேற்குறிப்பிட்ட எந்த பிரச்சனையும் இல்லை, சிலகாலம் சென்றபின் அந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து குடியமர்ந்து விட்டோம், இருப்பினும் அப்பொழுது இருந்தே அமாவாசை. பௌர்ணமி தினங்களில் வயிற்றுக்குள் நெருப்பு பந்து ஏறுவதும் இறங்குவதும் போல் இருக்கும் எனது உடலும் மனமும் அப்போது திடகாத்திரமாக இருந்ததால் நான் யாரிடமும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை, இப்போது தள்ளாத வயதில் அடிக்கடி ஏற்படுவதனால் என்னால் தாங்க முடியவில்லை என்று உண்மையை போட்டு உடைத்தார்,

   அவர் கதையை கேட்டபின் வசியமை வயிற்றிலிருந்து வெளியேறுவதற்கான மந்திரங்களால் உரு ஏற்றப்பட்ட சில மருந்துகளை அவரிடம் கொடுத்தேன், அதை சாப்பிட்ட சில நாட்களிலேயே உடலில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களில் வசியமை சிறிது சிறிதாக வெளியேறியதாகவும் தான் இப்போது பூரண சௌக்கியமாக இருப்பதாக தொலைபேசியில் கூறினார், இதை படிக்கும் உங்களுக்கு வசியமை என்பது தீமைக்காக பயன்படுத்தும் ஒரு பொருள் தானோ என்ற ஐயம் ஏற்படும், ஆனால் அது அப்படி அல்ல எந்த ஒரு பொருளையும் நன்மையாகவும். தீமையாகவும் பயன்படுத்துவது பொருளை பொருத்து அல்ல, அதை பயன்படுத்தும் மனிதனின் சிந்தனையை பொருத்தே அமைகிறது,

   வசியமையினாலும் பலவிதமான நன்மைகள் மனித சமுதாயத்திற்கு செய்யலாம், அப்படி நன்மை தரக்கூடிய சில வசிய அஞ்சனங்களை பற்றிய விவரங்களையும். தீமையிடம் இருந்து நாம் விடுபடுவதற்கு உண்டான வழிமுறைகளையும் பார்ப்போம்,

அஞ்சனம் என்றால் என்ன?
    அஞ்சனம் என்றால் ஐந்து பொருட்களின் கலவை என்று அர்த்தம், நமக்கு கைகால்களில் விரல்கள் ஐந்து மெய். வாய். கண். மூக்கு. செவி ஆகிய இந்திரியங்களும் ஐந்து பிரபஞ்ச சிருஷ்டிக்கு ஊற்றுச் கண்ணாக இருக்கும் காற்று. நீர். நெருப்பு. ஆகாயம். பூமி ஆகிய பூதங்களும் ஐந்து இப்படி நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் பல விஷயங்கள் ஐந்து ஐந்தாக இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்,
நமக்கு உடலில் பல அங்கங்கள் இருந்தாலும் முதன்மையான அங்கம் என்பது தலை மட்டுமே ஆகும், அதனால்தான் என்சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்று சொல்கிறார்கள்,

   அந்த சிரசில்தான் திருஷ்டி சக்தி (கண்) கிரியாசக்தி (காது) ஞான சக்தி (மூளை) போக சக்தி (வாய்) இச்சா சக்தி (நாக்கு) ஜீவா சக்தி (பல்) மனசா சக்தி (அறிவு) ஆகிய சக்திகள் தலைபிரதேசத்திலேயே அடங்கி உள்ளது, இந்த தலை எப்படி மனித வாழ்விற்கு தலையானதோ அதே போல மந்திர சக்திக்கும் இந்த மூலிகை அஞ்சனங்கள் தலையானது,

   அஷ்ட்டமா சித்துக்களான லகிமா. மகிமா. தகிமா. சித்திமா. பூரிணிமா. குசமா. சிகமா. சம்பூர்ணமா ஆகிய எட்டு வகையான சித்துக்கள் சித்திக்க சாஸ்த்திரப்படி அஞ்சனங்களை செய்து பயன்படுத்தினால் அச்சித்துக்கள் மிக சுலபமாக கிட்டும் என்று நமது சித்தர்களும். ரிஷிகளும் மிக விரிவாக கூறிச் சென்று இருக்கிறார்கள்,   உண்மையான உழைப்பும் கடுமையான முயற்சியும் நற்சிந்தனை உள்ள எவருமே அஞ்சனங்களை தயாரிக்க முடியும், தயாரிப்பதோடு மட்டுமல்ல மற்றவர்களின் துயர் துடைக்கவும் அதை பயன்படுத்தலாம்,

     இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும், அஞ்சனங்களின் துணை கொண்டு மற்றவர்களின் கஷ்டங்களை தீர்க்கலாமே ஒழிய அதே அஞ்சனத்தை நமக்கு நாம் பயன்படுத்தும்போது அஞ்சனங்களின் உரு மந்திரங்கள் சித்தி அளிக்காமல் போய்விடக்கூடும், எனவே இந்த விஷயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்,

     எனது அன்பர் ஒருவர் தொழிலிலும். செல்வாக்கிலும் மிக சிறந்து விளங்கினார், திடீர் என்று அவருக்கு ஓர் ஆண்டு காலமாக அனைத்து விஷயத்திலும் தோல்வியும் துயரமுமே ஏற்பட்டு வந்தது, தனது நிலையை என்னிடம் மிக்க சோகத்துடன் கூறினார், அவருடைய ஜாதகத்தை பார்த்தபோது 71/2 சனிபகவான் ஆதிக்கம் அவரை வாட்டி வதைப்பதை புரிந்து கொண்டேன்,

ஏழரைச் சனி என்றால் என்ன என்பது உங்களுகக்கு தெரியும், ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சந்திரா லக்கனத்திற்கு 12. 1. 2 ஆகிய இடங்களில் சனிக்கிரக சஞ்சாரம் ஏற்படுவதை 71/2 சனி என்று சொல்வார்கள்,

   இந்த சனிக்கிரக சஞ்சாரத்தினால் குறிப்பிட்ட கிரகத்தின் கதிர்வீச்சு அந்த மனிதனின் மூளை நரம்புகளை பாதித்து அவனுடைய சிந்தனைகளை திசைமாறி செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடும்,அந்த கிரக வீச்சிலிருந்து தப்பிச்சு பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணையை தேய்த்து சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்று குளித்துவிட வேண்டும், இதனால் சனிக்கிரகத்திலிருந்து நம்மை தாக்கும் கதிர் வீச்சிலிருந்து விடுபடலாம்,


    ஆனால் இது முழுமை அல்ல, “நீலபானு” எனும் அபூர்வ மூலிகையிலிருந்து பெரும் அஞ்சனத்தை பயன்படுத்தினால் பரிபூரணமாக 71/2 சனியிலிருந்து விடுபடலாம், இதை அந்த அன்பர் பயன்படுத்தி நல்ல பலனை அடைந்தார்,

   நீலபானு மூலிகை என்பது சர்வமூலிகையின் சக்தியையும் சர்வ கிரகங்ளின் கதிர் சக்திகளையும் ஒருங்கே தனக்குள் ஈர்க்க வல்லது, இந்த நீலுபானு மூலிகையை தினசரி பூஜை செய்பவர்கள் சகல சுக போகங்களையும் அனுபவிப்பார்கள் என்று சுதர் மகரிஷு கூறுகிறார், இந்த மூலிகையை மாலையாக்கி ஸ்ரீமன் நாராயணனுக்கு சமர்பிப்பவர்கள் அவரின் பூரண அருட்கடாட்சத்தை பெறுவார்கள் என்றும் இதை நெய்யில் பஸ்பமாக்கி யாகம் செய்தால் ஸ்ரீ பரமேஸ்வரனே பிரத்யட்சமாக காட்சி தருவார் என்றும் வேதங்கள் கூறுகின்றன,

   குழந்தை பேறு அற்றவர்கள் இந்த நீலபானு அஞ்சனத்தை பயன்படுத்தினால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை போல் தேஜஸ் உடைய குழந்தைகள் பிறக்கும் என்றும் இதை லேகியமாக கிளறி உண்டால் மகா மன்மத தேஜஸ் கிடைக்கும், புதிய வீடுகள் கட்டும் போது அஸ்திவாரத்தில் எண் திசையிலும் நீலபானுவை புதைத்தால் மனையினட சகல தோஷங்களும் நீங்கி ராஜயோக வாழ்க்கை ஏற்படும்,

இந்த நீலபானு பார்ப்பதற்கு பச்சை துளசி போல் இருக்கும், இதில் கிளைகளில் முட்கள் அதிகமாக இருக்கும், கருமை நிறத்தில் பூக்களும் மஞ்சள் நிற மகரந்தக் கோடுகளும் உள்ள இந்த செடி சந்தனம் போல் நறுமணத்தை வீசும், இதன் இலையை கசக்கினால் சோப்பு நுரை போல்வரும், காயை உடைத்தால் கடுகு போன்ற விதைகள் லட்சக்கணக்கில் இருக்கும்,


  இதன் சுவை புளிப்பும் இனிப்பும் கலந்து இருக்கும், இந்த நீலபானு மூலிகை விந்திய மலைப்பகுதிகளிலேயே மிக அதிகமாக காணப்படுகிறது, இதை முறையாக மருந்தாக சாப்பிட்டால் புற்று நோய்கூட பூரண குணமாகிவிடும் என்று அகத்தியர் கூறுகின்றார்,

   இந்த மூலிகை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அனுஷம். பூசம். உத்திராட்டாதி நட்சத்திரம் வரும் சனிக்கிழமையில் எமகண்ட நேரத்தில் சாபநிவர்த்தி செய்து தூபதீப நிவேதனம் காட்டி ஆணிவேர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் செடியை வீட்டிற்கு கொண்டு வந்து சனிக்கிரகத்தின் மூல மந்திரத்தை உச்சாடனம் 1 மண்டலத்திற்கு செய்து பின்னர் ஹோமம் செய்து அஞ்சனம் ஆக்கி வெள்ளி தாயத்திற்குள் அடைத்து ஞாயிற்றுக்கிழமை நவக்கிரக சன்னிதிக்குப் போய் ஒன்பது கிரகங்களுக்கும் நவதான்யம் இறைத்து ஒன்பது வண்ண வஸ்த்திரம் சாற்றி ஒன்பது தீபம் காட்டி ரட்சையை அணிந்து கொள்ள வேண்டும், இது சர்வ மேன்மை சர்வசக்தியையும் கொடுக்கும் 7 1/2 சனி. அஷ்டமத்து சனி. கண்ட சனி இவைகளின் துயரை போக்கும் செவ்வாய் தோஷம். சர்பதோஷம். கோ சாபம். மாதுர் பிதூர்சாபம். “ஸ்ரீ” சாபம் உட்பட சகல சாபங்களையும் போக்கி சர்வ காரிய சித்தியை ஏற்படுத்தும்,

2 comments:

cs said...

enakku,ennudaiya jathgaththil sani

dhisaiyil kethu piththi nadakkirathu.

athartkku naan enna seiya vendum?

logeshkumar said...

உங்களின் மேலான பதிவிற்கு நன்றி,
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

இதன் விளக்கம் உங்கள் பதிவு படித்த பின்பு சிவன் எவ்வாறு எந்நாட்டவருக்கும் இறைவனாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது புரிந்தது.
உங்களின் கருத்துகளுக்கு என் தலைவணக்கங்கள்

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்