கோவிலில் கோழி வெட்டலாமா...?


கேள்வி : இராகுகாலம், எமகண்டம் நேரங்களில் விசேட நிகழ்ச்சிகளைத் தொடங்கக் கூடாது என்கிறார்களே? அதைப்பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
                                                                                                  சிவநேச குருக்கள் அமெரிக்கா

    பூமியானது ஒவ்வொரு நாளும் தன்னைத்தானே சுற்றி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும், அவ்வாறு சுற்றிவரும் போது ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வடதிசையை நோக்கிச் தாழ்கிறது அவ்வாறு சுழலும் போது மனிதனின் எண்ண அலைகள் அத்திசையை நோக்கி ஈர்க்கப்படும், அந்த நேரத்தில் மனித எண்ணம் சற்று மந்தமாகச் செயல்படும், சுறுசுறுப்பு சற்று குறைவாகவே இருக்கும், அந்தக் குறிப்பிட்ட காலங்கள் தான் இராகுகாலம். எமகண்டம் என அழைக்கப்படுகின்றன, ஆகவே அந்த நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் நாம் சுப விசேட நிகழ்ச்சிகளில் ஈடுபடலாம்


  கேள்வி : நாம் நெற்றியில் விபூதி. குங்குமம். சந்தனம் போன்றவற்றை இட்டுக் கொள்வது எதற்காக?
                                                                                                             நளினி குமாரசிங்கம்  ஸ்ரீலங்கா

    பொதுவாக மனிதனுடைய என்ண அலைகள் வலிமை வாய்ந்தவை, மற்றவர்கள் எண்ணம் (நல்லதாகவும். கெட்டதாவும்) நிச்சயம் நம்மைத் தாக்கும், அவ்வாறு தாக்கும்போது முதலில் அது நம்முடைய புருவ மத்தியின் வழியே சென்று நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது, அதைத் தவிர்க்கவும். வலுவான எண்ணங்களுக்காகவும் நாம் விபூதி. குங்குமம். சந்தனத்தை அவரவர் சம்பிரதாயப்படி இட்டுக்கொள்ளுதல் அவசியம், இதனால் முகம் பொலிவுபெறுகிறது





 கேள்வி :ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும். நாகசதுர்த்தி தினத்தன்றும் பெண்கள் புற்றில் பாலை வார்க்கிறார்களே. இதன் நோக்கம் என்ன?
                                                                                                          பத்மினி வாரியார் சென்னை

    நான்கு யுகங்களிலும் மனிதனுடைய துயரைப் போக்க அவதரிப்பவன். அவதரித்தவன் இறைவன், அவனுக்கு வாகனமாக இருந்து வந்தது நாகம், இதை ஒரு சாரார் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகிறார்கள், புற்றுக்கு அருகில் ஒரு பாத்திரத்தில் பாலை வைத்துவிட்டு நாம் வந்துவிடுகிறோம், அந்தப் பாலை. பாம்பு குடிப்பதில்லை, மாறாக புற்றுக்கு அருகில் உள்ள மற்ற ஜீவன்கள் தான் பாலை அருந்தும், ஆகவே நாகங்களை விக்கிரகமாகக் கொண்டு அபிஷேகம் செய்தால் நன்மை ஏற்படும், இவ்வாறு செய்வதால் மன நிம்மதியும் கிடைக்கும்


கேள்வி : ஆலயங்களில் உயிர்பலியிடுதலை இந்தக் கால கட்டத்திலும் நிறையப்பேர் செய்கிறார்களே. இது எதனால்?
                                                                                                                கல்யாணசுந்தரம்  சிங்கபூர்

    சாக்த மதத்தில் தாந்திரீக வழிபாடுகளில் மந்திரம். யந்திரம். தந்திரம் ஆகியவற்றைப் பிரதிஷடை செய்யும் போது  உயிர் பலியிட வேண்டும் என்றும் காலமுக மதப் பிரிவில் பைரவர் வழிபாட்டில் உயிர்பலியிடுவதைப் பற்றியும் பல குறிப்புகள் உள்ளன, வேதகாலத்தில் செய்யப்பட்ட பெருவாரியான யாகங்களில் பசு. குதிரை. ஆடு. மனிதன் போன்றவற்றைப் பலியிடப் பட்டதற்கான ஆதாரம் உள்ளது, வேதங்களில் குதிரை. மாமிசப் படையலைப் பற்றியும். மதுபானப் படையலைப் பற்றியும் பல குறிப்புபகள் உள்ன, எனவே உயிர் பலியிடுதல் என்பது பழைமையான விஷயம்,  மகாகாளிக்குத் தன்னையே பலியிட்டு பூஜை செய்த மராட்டியர் . தமிழர்களைச் சரித்திரத்தில் காணலாம், இக்காலத்தில் வைதிகச்சடங்குகளில் உயிர்ப்பலி இடுவது முற்றிலும் குறைந்து விட்டது அது பாவம் என்ற ஜீவகாரூண்ய எண்ணமும் வளர்ந்து விட்டது அதற்கு மாற்றாக பூசனிக்காய். எலுமிச்சை. அவல் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.



0 comments:

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்