இருட்டில் பார்க்கும் அதிசய கண்கள்


    எந்தவொரு செயலையும் ஆச்சரியத்தோடும் அதிசயத்தோடும் பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விட்டால் அறிவு வளர்ச்சி என்பது முழுமை பெறாது. நிறைவும் அடையாது எதைக் கண்டாலும் அதிசயப்பவன் அந்த அதிசயத்தைப் பற்றி நாள் முழுக்க பேசிக் கொண்டிருப்பானே ஒழிய அது ஏன் நிகழ்ந்தது? எப்படி நிகழ்ந்தது? எதற்காக நிகழ்ந்தது? என ஆராய முற்பட மாட்டான்,

     பைபிளில் பிரசங்கி என்ற அதிகாரத்தில் ஒரு வசனம் வரும் “சூரியனுக்கு கீழும். பூமிக்கு மேலேயும் நடப்பதில் எதுவும் விந்தையில்லை” என்று அப்போஸ்தலர் ஒருவர் கூறுகிறார், அதாவது பூமியில் நிகழ்வது எல்லாமே இறைவனால் நிர்மானிக்கப்பட்ட விஷயங்களே, நிகழ்வுகளின் உட்பொருளை பார்க்க வேண்டுமே தவிர நமது பார்வையை நிகழ்வோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது.

     எமது ஊரில் இருந்த பெரியவர் தோப்பையா வைக்கோல்போரில் வெற்றிலையைத் துப்பியவுடன் வைக்கோல் போர் திகுதிகு என பற்றி எரிந்தது, அந்தக் காட்சி அந்த வயதில் எனக்கு ஆச்சரியத்தையும். அதிசயத்தையும் தந்தது என்றாலும் பின் நாட்களில் அது எப்படி சாத்தியமாயிற்று என ஆராயத் தூண்டியது.அந்த ஆராய்ச்சிக்காக கண்கட்டு வித்தை, குறளி வித்தை. இந்திர ஜாலம் போன்றவற்றில் பல நூல்களையும். பல பெரியவர்களையும் அணுகி பல விஷயங்களை அறிந்து கொள்ளவும். அனுபவப்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக இருந்தது,

   இயற்கையின் துணை கொண்டு இயற்கையின் செயலையே சற்று மாறுபடுத்திக் காட்டலாம் என்ற உண்மை புரிய ஆரம்பித்தது, உதாரணமாக வெள்ளை வெளெரென்று இருக்கும் அழகிய மல்லிகை பூக்களை பொன்னிறத்தில் ஜொலிக்க வைக்க வேண்டுமென்றால் குங்குமப் பூவை தண்ணீர் விட்டு அரைத்து மல்லிகைப் பூவில் தெளித்து விட்டால் பூக்கள் தங்க நிறத்தில் ஜொலிக்கும் என்ற உண்மைகள் தெரிய ஆரம்பித்தன.

நீர் மேல் நெருப்பு என்று அழைக்கப்படும் ஆகாசத் தாமரையை பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வாயில்மென்று காற்றுவாக்கில் வைக்கோல் போரில் துப்பினால் அது தானாக பற்றி எரியும் இதைத்தான் தோப்பையா அன்று செய்தார்,    சில கண்கட்டு வித்தைக்காரர்கள் மூன்றேமுக்கால் நாழிகையில் மாஞ்செடி முளைத்து கனி கொடுக்கும் செயலை செய்தார்கள், இதை பலர் பார்த்திருக்கலாம், அது மெஸ்மரிசத்தினால் நமக்கு அப்படி தெரிகிறது என்று கருதுவோரும் உண்டு, ஆனால். இது மெஸ்மரிசம் அல்ல,
ஏரழிஞ்சல் என்கிற மரம் மற்ற மரங்களைப் போல் இல்லாமல் சில விசித்திரத் தன்மை கொண்டது, இந்த மரத்தில் காய்க்கும் கனிகள் கனிந்து பூமியில் உதிர்ந்தவுடன் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்ளும்,

   இத்தகைய அந்த மரத்தின் விதைகளை எடுத்து வந்து அதை பூந்தைலமாக்கி சிறிது மாம்பழச் சாறும். பல மாந்திரிக வேலைகளுக்கு பயன்படும் ஜங்கோலத் தைலத்தையும் மேற்கண்ட பூந்தைலத்துடன் கலக்கி கலவையில் சில நாட்கள் ஊறவைத்து பின்னர் அந்த மாங்கொட்டையை மண்ணில் புதைத்து மண்ணை மூடி தண்ணீர் தெளித்து அந்த இடத்தைக் கூடையால் மூடிவிட வேண்டும்,

    20 நிமிட இடைவெளிவிட்டு மீண்டும் தண்ணீர் தெளித்து மூடிவிட வேண்டும், இப்படி நான்குமுறை கூடையை மூடி திறக்கும்போது மாஞ்செடி முளைத்து பழம் பழுத்து நிற்கும்,


     இதைப்போன்று ஒன்றரை மணி நேரத்தில் கம்பஞ்செடியும். கதிரும் வர வைக்கலாம், கோழி முட்டையில் இருக்கும் வெண்கரு என்ற அம்புலியை வெளியே எடுத்து விட்டு அதனுள் கம்பல்புல் கொஞ்சம் போட்டு மெழுகால் மூடிவிட வேண்டும், பின்னர் நான்கு முறை கோழியிடம் அடைகாக்க வைத்துவிட வேண்டும், இப்படி செய்து இந்தக் கம்பம் விதைகளை எடுத்து மண்ணில் விதைத்தால் ஒன்றரை மணி நேரத்திலேயே செடி வளர்ந்து கதிர் தள்ளி விடும்,

   இப்படி எத்தனையோ விஷயங்கள் சிறிதும். பெரிதுமாக மறைந்து கிடக்கிறது, இவைகளைக் கண்டறிந்து தவறான வழியில் பயன்படுத்துவோர் பலர் இருக்கிறார்கள், ஆனால். இதை ஒரு அரிதான கலை என்கிற நோக்கோடு அணுகுவோரும் சிறிது காலத்திலேயே சுயநலத்தோடு பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள், எனவே இத்தகைய கண்கட்டு வித்தையில் தீமைக்கு பயன்படக்கூடிய பலவற்றைத் தவிர்த்து நன்மை தரும் பல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

   கிராமங்களிலும். நகரங்களிலும் பேய் பிடித்து ஆடுவோர் பலர் இருக்கிறார்கள், பெருவாரியான பேய்கள். பெண்களைத்தான் அதிகம் பிடிக்கின்றது, இதில் உண்மையான பேய் பிடித்திருப்பதை விட தனக்கு பேய் பிடித்திருக்கும் என்ற போலியான நம்பிக்கையில் இருப்பவர்கள்தான் அதிகம்.

இதை ஒருவித “ஹிஸ்டீரியா” நோய் என்றே கூற வேண்டும், இந்த நோயை நீக்க “மருளுமத்தை” என்ற காயை பறித்து காயவைத்து பொடி செய்து பாதிக்கப்பட்ட நபரின் தலையில் நன்றாக தேய்க்க போலியான பேய் ஓடிவிடும், அதாவது ஹீஸ்டீரியா நீங்கி விடும், இதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் எத்தனையோ போலி மாந்தீரிகர்கள் உண்டு, இவர்களிடம் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமே ஒழிய அவர்களைக் குறைகூறி பயனில்லை, கும்மிருட்டான பகுதியில் நமக்கு மட்டும் நன்றாக கண் தெரிந்து நடமாடினால் எப்படி இருக்கும், அது ஒரு சந்தோஷமான அனுபவமாகத் தானே இருக்கும், அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய வேண்டாமா? அதை நீங்களே நடைமுறைப்படுத்தியும் பார்க்கலாம்.


  சில சுறாமீன் தலையில் இரண்டு கல் இருக்கும், அதைவிடுத்து ஒரு கல் இருக்கும் சுறா மீனிலிருந்து அந்தக்கல்லை எடுத்து சிறிது மின்மினி பூச்சிகளைப் பிடித்து தலைபிரசவமான பெண்ணின் தாய்ப்பாலில் மீன் கல்லையும் மின்மினி பூச்சிகளையும் அரைத்து நெற்றியில் திலகம் போல் அணிந்து கொண்டு இருட்டைப் பாருங்கள்,  உங்கள் கண்களில் இருந்து லேசர் ஒளிக்கற்றை போன்று கதிர் பாய்ந்து இருட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் துல்லியமாக உங்களுக்கு காட்டும், இதை எனது வேலூரில் இருக்கும் பக்தர் ஒருவர் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளார்,

எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் குடிப்பதற்கு பயன்படாத அளவிற்கு திடீரென்று உப்பாக மாறிவிட்டது, இது ஏதோ தீயசக்தியின் வேலையோ என்று அஞ்சி என்னிடம் வந்தார், சில பொருட்களை கொடுத்து இதை கிணற்றில் போடுங்கள் 10 நாட்களில் தண்ணீர் பழையபடி சுவையாக மாறிவிடும் என்று கூறி அவரை அனுப்பினேன், நான் கூறியபடி பத்து நாட்களுக்கு உள்ளாகவே தண்ணீர் சுவையாக மாறிவிட்டது என்று என்னிடம் வந்து சந்தோஷமாக கூறினார், தீய சக்திகளை அகற்றிவிட்டீர்கள் சுவாமி என்று அவர் கூறிய போது நான் அவரிடம் அவரது அறியாமையை அகற்றி உண்மையை புரியவைத்தேன்,

   எந்த தீய சக்தியும் உங்கள் தண்ணீரை கெடுக்கவில்லை, ஆழ்மணலில் ஏற்பட்ட சில ரசாயன மாற்றங்கள் தண்ணீரின் தன்மையை மாற்றி இருந்தது, அதைப் போக்கிட மருதம் பட்டை. கோரைகிழங்கு. வெட்டிவேர். பிர்க்கன் விரை. நெல்லிக்காய். புளியங்கொட்டை ஆகியவைகளில் இருந்து பெற்ற பொடியை உங்களிடம் கொடுத்து நீரில் போடச் சொன்னேன், அது தண்ணீரை நன்றாக மாற்றிவிட்டது,

   இது மந்திரமாயம் அல்ல, கண்கட்டு வித்தையும் அல்ல, ஏரி. குளங்களில் கூட இந்த பொடியை தூவினால் விஷம் கலந்த நீரும் நன்னீராக மாறிவிடும் என்று கூறி அவரை தெளிவு பெறசெய்தேன், இந்த பொருட்களோடு மந்திர பிரயோகமும் இணைந்தால் எந்த ஒரு செயலிலும் அளப்பரிய வெற்றியைக் காணலாம்.

நான் மேலே கூறியவைகள் கண்கட்டி வித்தைகளில் இருக்கும் நன்மைகளில் சில, எந்த ஒரு விஷயத்திலும் அல்லாதவைகளை விட்டு நல்லனவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும், கோயிலில் இருக்கும் கற்சிலைகளை கண்கட்டி வித்தையால் கண்ணீர் வடிக்கச் செய்யலாம், பாலை குடிக்க செய்யலாம், வேப்ப மரத்தில் இருந்து பாலையும். இரத்தத்தையும் ஊற்ற செய்யலாம். இவையெல்லாம் இறைசக்தி என்று பிரச்சாரம் செய்யப்படும் பொய் விஷயங்களே ஆகும்.இந்த வித்தைகளை பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்தால் போலி மனிதர்கள் நடுங்குவார்கள், நல்லவர்களும் நல்லவைகளும் மட்டுமே நாம் காணக்கூடிய நிலை உருவாகும்.


8 comments:

Lakshmanan said...

இதுபோன்ற பதிவுகளில் எனக்கு ஆர்வம் அதிகம். சித்தர்கள் இதை ஜாலதந்திரம் என்று குறிப்பிட்டு நிறைய நூல்கள் எழுதி இருக்கிறார்கள். இதில் பிரபலமானது ”புலிப்பாணி ஜாலதந்திரம்”. இதுபோன்று நன்மை பயக்கும் வித்தைகளைப் பற்றி ஒரு தொடர் எழுதலாமே. “மருளுமத்தை” சாதாரனமாக கிராமங்களில் கிடைக்குமா? இதற்கு வேறு ஏதாவது பெயர்கள் இருக்கின்றனவா?

ஐயா போகர் சித்தர் ஒரு பாடலில் காந்தரசத்தை குடக்கரியில் இட்டு உருக்கு என்று சொல்கிறார். குடக்கரி என்றால் என்ன?

Lakshmanan said...

இந்த “மருளுமத்தை” எல்லாவகை ஹிஸ்டீரியாவையும் போக்குமா?

sekar said...

அற்புதமான கட்டுரை.தொடர வேண்டும்!

tdrajeswaran said...

மிகவும் அற்புதமான கட்டுரை. இதுவரை அதிசயங்கள் என்று நினைத்து இருந்தவை எல்லாம் உண்மையில் நம்முடைய அறியாமைதான் என்பதை மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளீர்கள். தங்கள் கட்டுரைகள் அனைத்தும் எங்களுடைய கண்களை திறக்க உதவுகின்றன். மிகவும் நன்றி.

வினோத் கன்னியாகுமரி said...

ஐயா தங்களிடம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

போலி விசயங்களை அம்பலப்படுத்த தாங்கள் இப்படியான விஷயங்களை உலகிற்கு எடுத்துரைப்பது மிகச்சிறந்தது.

நன்றி

tthendral said...

அருமையாக எழுதுகிறீர்கள்!
அறியாமையை விரட்டும் உங்கள் செயல் தொடரட்டும்

T.N.Balasubramanian said...

நீங்கள் கூறிய விஷயங்கள் மிகவும் ஆச்சரியத்தை தருகின்றன. நம்பாமல் இருக்க முடியவில்லை.! மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதை சிறு வயதில் பார்த்த அனுபவம் உண்டு.

ரமணீய

kalaimoon said...

இவையெல்லாம் இறைசக்தி என்று பிரச்சாரம்
செய்யப்படும் பொய் விஷயங்களே ஆகும்,இந்த வித்தைகளை பற்றி
ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்தால் போலி மனிதர்கள் நடுங்குவார்கள்,
நல்லவர்களும் நல்லவைகளும் மட்டுமே நாம் காணக்கூடிய நிலை உருவாகும்,

அருமை !உங்களது கூற்று உண்மையே .அருமையான பதிவு.

நன்றி! தொடருங்கள் அறியாமை விலக

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்